Saturday, 16 August 2014

காளிதேவியின் உருவ அமைப்பின் தத்துவம்

கொஞ்சம் கோபமா பேசுற பெண்ணை காளி மாதிரி கத்துறான்னும், அலங்காரம் செய்யாம தலைவிரி கோலமா இருக்கும் பெண்ணை பத்ரகாளி மாதிரி இருக்கான்னு கிண்டல் செய்வோம். அதேமாதிரி,வீட்டு பூஜை அறையில் காளி அம்மன் படத்தை வச்சு வணங்கக் கூடாதுன்னும் சொல்வோம். காரணம், வெளித்தள்ளிய பல்லும், கருத்த உடலும், தலைவிரி கோலமும், மண்டை ஓட்டை மாலையாகவும், கையில் கபாலம், மற்றும் ஆயுதங்களை ஏந்தியும் காட்சி தருவதால் நாம் காளி தேவியை கண்டு பயப்படுகிறோம்.
நாம் நினைக்குற மாதிரியில்லாம காளி ஒதுக்கப்பட வேண்டிய தெய்வமில்லை.
"காளி"என்பவள், அனுக்கிரக தெய்வம். காளியை உபாசிக்க ஆரம்பித்த பின், நாளடைவில் பயம் நீங்கி,அவளிடம் ஈடுபாடு ஏற்படும்.காளி என்பவள் அம்பிகையின் ஒரு தோற்றம். தீயவர்களை அழிக்க அம்பிகை எடுத்த அவதார தோற்றமேயன்றி அவள் குழந்தையான நாம் அவளை கண்டு பயப்பட அவசியமில்லை.
*"அறியக் கூடியவள் நான்:
*அறிய முடியாதவள் நான்:
*ஞானமும், அஞ்ஞானமும் நான்:
*பிறப்பும், பிறப்பில்லாததும் நான்:
*கீழும்,மேலும் நான்:
*சகலமும் நான்".
என்கிறாள் காளி.
உண்மையை மறைத்துக் காட்டுகிறாள். உண்மையைப் புரிந்து கொண்டால்  ஸ்வரூபத்தை காணலாம்.
"நான் உலகத்தின் உயிர் தத்துவம். உலகினின்று நான் பிரிந்தால்,உலகம் சவமாகிக் கிடக்கும்.இதை விளக்கத்தான் நான், சிவரூபமான சவத்தின்மேல் காலடி வைத்திருக்கும் தோற்றம்.ஞானம், விஞ்ஞானம் எல்லாமே என் விரிந்த கூந்தலில் அடக்கம்.நாக்கை அடக்கினால் யாவும் வசப்படும்.அதனால், நாக்கைத் தொங்கவிட்டு இதை விளக்குகிறேன். சரீரத்தில் தலையே பிரதானம்.அதுவே, ஞான சக்தி நிலையம்.இந்த நிலையத்தில் உள்ளது எதுவோ அதுவே பிரும்மாண்டத்தில் உள்ளது"",என்கிறார்.
"பிரமாண்டத்தைப் படைத்து,காத்து, அழிப்பவள் அவளே!  இந்த பிரும்மாண்டங்களையே முண்ட மாலையாக தரித்திருக்கிறாள். ஒரு கரத்தில் கொடுவாள்.அது அஞ்ஞானத்தை வெட்டித் தள்ளும் சாதனம்.கீழே தொங்கும் தலை, விஷ வாசனைகளிலிருந்து அம்பிகையால் விடுவிக்கப்பட்ட ஜீவனின் இறுதித் தோற்றம்.வர,அபய முத்திரை,பக்தர்கள் வேண்டுவதை அளித்து அபயம் தருவது.ஆடை அணியாதவள் காளி. ஜீவன் அஞ்ஞானத்தால் மூடப்பட்டுள்ளது. அஞ்ஞானம் விலகினால், ஜீவப்ரகாசம் புலனாகும் என்பதை, ஆடை இல்லாமலிருப்பது விளக்குகிறது.
சிவபெருமானின் நான்கு சக்திகளில் காளி குரோத சக்தி ஆவாள்.
பராசக்தியாகிய தேவியின் சினத்திலிருந்து தோன்றியவள் காளி. கர்பத்தில் பிறக்காத கன்னிகையாள் மட்டுமே மரணம் தனக்கு சம்பவிக்க வேண்டும் என்று பிரம்மாவிடம் வரம் பெற்ற சும்ப, நிசும்பா்கள் ஈரேழு பதினாங்கு லோகங்களையும் ஆட்டிப் படைத்தனா். இவா்களின் அட்டூழியங்களை சகிக்காத பிரம்மா சிவனிடம் முறையிட அவா் கடும் சினமுற்றவராய் மென்மையா பராசக்தியை நோக்கி “ஏ“ காளி என்றாா்.
அடுத்த கணமே கெளாி மனோகாியான பாா்வதி தேவியின் சரீரத்தில் இருந்து காிய நிறம் கொண்ட கன்னிகை ஈரேழு பதினாங்கு உலகங்களும் அதிரும்படி வீரசக்தி தோன்றினாள். அவளே காளி.
காளி என்றால் விரட்டுபவள் என்றும் பொருள் உண்டு.காலனை விரட்டுவதாலும், தீமைகளை விரட்டுவதாலும் காளி என்றனா்.
ஜீவாத்மாக்களைப் பிறவிப் பெருங்கடலிருந்து விடுவித்து முக்தி என்னும் கரை சோ்ப்பவள் காளி. நாம் தூரத்திலிருந்து பாா்த்தால் கடலின் நிறம் நீலமாகத் தென்படுகிறது. அருகில் சென்று கடல் நீரை எடுத்தும் பாா்த்தால் அந்தக் கடல் நீருக்கு என்றும் தனியே ஒரு நிறமும் இல்லை.அதுபோல் அஞ்ஞான நிலையில் இருப்பவா்களுக்கு காளி கருமை நிறம் கொண்டவளாகத் தென்படுகிறாள்.
ஞானிகளுக்கோ அவள் எல்லையற்ற தெய்வீக ஒளி வடிவினாள் காளி பாா்பதற்கு பயங்கர வடிவம் கொண்டவள். அஞ்ஞானிகளுக்கு பயங்கர வடிவம் உள்ளவளாகத் தென்படும் காளி தேவி ஞானிகளுக்கு ஆனந்த சொரூபிணியாகக் காட்சி தருகிறாள்.
காளிக்கு “திகம்பாி” என்று ஒரு பெயா்.இதற்குத் திசைகளையே ஆடையாகக் கொண்டிருப்பவள் என்று பொருள்.
திசைகள் அனைத்தையுமே ஆடையாகக் கொண்ட அவளுக்கு எந்த ஆடை பொறுத்தமாக இருக்கும்?எந்த ஆடையை எவ்வளவு பொிய ஆடையை அவள் அணிந்து கொள்ள முடியும்? பிரபஞ்சமே அவளாக இருக்கும் போது அவளை எந்த உடைகொண்டு போா்த்த முடியும் எனவே தான் அவள் உடை எதுவும் இல்லாமல் இருக்கின்றாள்.நம் இந்து மதத்தில் நான்கு கைகள் உடையவா்களாக தேவா்கள்,தேவியின் வடிவம் சித்தாிக்கப்பட்டிருக்கின்றன.இது அவா்கள் மனிதா்களை காட்டிலும் அதிக ஆற்றல் உடையவா்கள் என்பதை உணா்த்துகிறது.
காளி தான் இடுப்பில் கைகளை ஒட்டியானமாக அணிந்திருக்கின்றாள்.கைகளைக்கொண்டு நாம் செயல்புாிகிறோம். உலகில் உள்ள அனைவாின் கைகளின் மூலமாகவும் காளி செயல்படுகிறாள். எனவே செயல் அனைத்தும் காளி தான் நடத்திக்கொண்டிருக்கிறாள் என்பதை அவள் இடுப்பில் அணிந்திருக்கும் கைகளாலான ஒட்டியானம் குறிப்பிடுகிறது.
காளிக்கு முண்டமாலினி என்று ஒரு பெயா். இதற்கு மண்டை ஓடுகளை மாலையாக அணிந்திருப்பவள் என்று பொருள்.
காளியின் கழுத்தில் குழந்தைப் பருவத்திலிருந்து வெவ்வேறு வயதுடையவா்களின் மண்டையோடுகள் மாலையாக உள்ளன. இது குழந்தை பிறந்ததிலிருந்து எந்த வயதிலும் மரணம் நோிடும். வாழ்க்கை நிலையற்றது. எனவே அாிதாகக் கிடைத்த மனிதப் பிறவியைப் பயன்படுத்தி மனிதன் ஆண்டவனுக்கும் ஆண்டவனின் அடியாா்களுக்கும் மனித குலத்திற்கும் பயன்படும் வகையில் அறவாழ்க்கை வாழ வேண்டும் என்பதை உணா்த்துகிறது.
காளியின் ஒரு கை வரதஹஸ்தம் வரம் தரும் நிலையில் இருக்கிறது. பக்தா்களுக்கு அனுக்கிரகம் செய்வதில் அன்னை காளிக்கு இணை அவளேதான்.
அன்னையின் இன்னொரு கை அபய ஹஸ்தம் அது பக்தா்களின் பயத்தையும் துன்பங்களையும் நீக்கிப் பாதுகாப்பு அளிக்கிறது.காளி தன் ஒரு கையில் வாள் ஏந்தி இருக்கிறாள்.அது தீமை எங்கே இருந்தாலும் முடிவில் அதை காளி வெட்டி சாய்த்து விடுவாள், அவளுடைய தண்டனையிலிருந்து தீயவா்கள் தப்பிவிட முடியாது என்பதை உணா்த்துகிறது.
காளி இன்னொரு கையில் வெட்டிய ஒரு தலையைப் பிடித்திருக்கிறாள். இது தீயவா்கள் காளி தேவியால் தண்டிக்கப்படுவது உறுதி என்பதை உணா்த்துகிறது.
உலகிற்கு ஒளி தரும் சூாியன்,சந்திரன்,அக்கினி ஆகிய மூன்றையும் காளிதன் மூன்று கண்களாகக் கொண்டிருக்கிறாள். காளியின் விாிந்த காிய கூந்தல்.அவளது எல்லை காண இயலாத வியாபத் தன்மையையும் ஆற்றலையும் உணா்த்துகிறது.
கொடிய ஆயுதத்தோடும், மயானத்தில் இருந்தாலும்கூட காளிதேவியின் இதழில் மந்தகாச புன்னகையோடு திகழ்கிறாள். "வாழ்வில் சிரித்திரு, துன்பம் கண்டு நடுங்காதே"என்கிறாள்.
வாழ்வின் உல்லாசமே சிரிப்பாக மலர்கிறது. இப்படிப்பட்ட அம்பிகையை வழிபட்டு,அவள் அருளாலே சம்சாரமாகிய கடலை கடக்கலாம் என்கின்றனர்.
காளியை வழிபட, பலவித பூஜை முறைகள் சொல்லப்பட்டுள்ளன.இதுத்தவிர, காளியின் அருள் பெற,அவளது நாமாவளிகளைச் சொன்னாலே போதும்.ஸ்தோத்ர, அர்ச்சனைகளால் அவள் சந்தோசமடைகிறாள்.
காளிக்கவசம்,காளி கீலக ஸ்தோத்ரம் என்று பல ஸ்தோத்ரங்கள் உள்ளன.முறையாக வழிபட்டால், காளியின் அருள் பெற்று சகல பாக்கியங்களையும் பெறலாம்."காளி... காளி..."என்று பயந்து ஒதுங்கிப் போக வேண்டாம்.
நன்மை செய்யத்தான் தெய்வங்கள் உள்ளன;யாரையும் கெடுப்பதற்கல்ல!

Friday, 25 July 2014

மந்திர சித்தி பெறுவதில் சில எளிய வழிமுறைகள் :

    மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக்கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்திபெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது.
ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.
1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.
சுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது
மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.
உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும்.
வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை
நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.
2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு
கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையிலும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும்.
இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக
ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ணசதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்ல சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்குஏற்றவையே.
3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில்மந்திரஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில்தொடங்கி குறிப்பிட்ட அடுத்த
திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.
4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக்கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.
5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.
6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய
வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம்முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714
ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.
7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால்அம்மந்திரம் ஸித்தியாகிறது.
8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.
9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ளஎழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து
குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.
10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும்
மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும்மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.
11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.
12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.
13. ஜபத்திற்குரிய இடங்கள் ஜபம் எங்கு எப்படிச் செய்ய வேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11- 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.
14. சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.
15. பூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம். கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம்
செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.
16. சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.
17. கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல்மீது ஜபம்செய்தால்ஞானம்; புலித்தோல்மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.

Wednesday, 30 April 2014

சித்தர்களின் உடலுறவு கொள்கை

சித்தர்களின் உடலுறவு கொள்கை
விலக்கான 3 நாட்களையும் தள்ளி 4ம் நாள் முதல் 16ம் நாள் வரை உடலுறவு கொண்டால்தான் குழந்தை உற்பத்தியாகும். மற்ற நாட்களில் கருப்பை மூடிக் கொள்ளும்.
4ம் நாளில் கூடி கருத்தரித்தால் பக்தியுடன் கூடிய ஒரு ஆண் மகன் உருவாகும்.
5ம் நாள் கூடினால் வேசித் தன்மையுள்ள, அவதூராண பெண் மகள் உருவாகும்.
6ம் நாள் கூடினால் ஆயுள் முழுவதும் வறுமையில் வாழும் ஆண்மகன் உருவாகும்.
7ம் நாள் கூடினால் தன் கணவனுடனும் பிறருடனும் வாழும் ஒரு பெண்மகள் உருவாகும்.
8ம் நாள் கூடினால் பக்தியுள்ள யாவரும் போற்றும் அற்புத ஆண்மகன் உருவாகும்.
9ம் நாள் கூடினால் கற்புக்கரசியாய் பக்தியுள்ளவளாய் பூரண ஆயுளோடுக் கூடிய பெண்மகள் உருவாகும்.
10ம் நாள் கூடினால் அளவற்ற செல்வந்தனாகி பூரண ஆயுளுடன் கூடிய மகன் உருவாகும்.
11ம் நாள் கூடினால் மஹாப்பதிவிரதை, உலகரிந்த உபகாரியான அழகுடைய பெண்மகள் உருவாகும்.
12ம் நாள் கூடினால் சன்மார்க்க சாதனையாளனாக உலகம் புகழும் ஆண்மகன் உருவாகும்.
13ம் நாள் கூடினால் ஆடல் பாடல்களில் வல்லவனாய் பூரண ஆயுளுடன் வாழும் பெண்மகள் உருவாகும்.
14ம் நாள் கூடினால் தர்ம சிந்தை, அதிகாரம் செய்யும் அற்புத புகழுடன் வாழும் ஆண்மகன் உருவாகும்.
15ம் நாள் கூடினால் 32 லட்சணங்களுடன் அநேக குழந்தைகளுடன் அரச பத்தினியாய் வாழும் பெண்மகள் உருவாகும்.
16ம் நாள் கூடினால் அநேக சிறப்புகளுடன் அற்புத அரசனாக வாழும் ஆண்மகன் உருவாகும்.
மேற் கண்டவைகளை மனதில் கொண்டு நல்ல குழந்தைகளையே உலகிற்கு வரவிடுங்களேன