Tuesday, 22 November 2016

கொடிமர தத்துவம்

கோவிலில் வாயில்படி இருந்தால், அதை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். இதில் அறிவியல் பூர்வமான ஒரு செயலை நம் முன்னோர்கள் வைத்து இருக்கிறார்கள்.

ஒரு பக்தன், கோவில் வாசல்படியை தொட குனியும் போது அது முதலில் அவனிடம் பணிவை ஏற்படுத்துகிறது. அடுத்து அது அவன் உடம்பில் உள்ள சூரிய நாடியை இயக்குகிறது.

படிக்கட்டை தொட்ட பிறகு வலது கை விரல்களை நம் நெற்றியில் புருவ மத்தியில் உள்ள ஆக்ஞா சக்கரம் மீது வைத்து அழுத்த வேண்டும்.
இது நம்மிடம் உள்ள தீய சக்திகளை விரட்டும். அதோடு தெய்வ சன்னதிகளில் இருந்து வரும் அருள் அதிர்வலைகளை மிக எளிதாக நமக்குள் கிரஹிக்க செய்யும். எனவே அடுத்த தடவை கோவிலுக்கு செல்லும் போது படிகளை வலது கையால் தொட்டு, உங்கள் புருவ மத்தியில் சற்று அழுத்தம் கொடுத்துப் பாருங்கள். அது உங்களை புது மனிதனாக்கி, புத்துணர்ச்சியுடன் கோவிலுக்குள் செல்ல வைக்கும்.

உள்ளமும், உடலும் சிலிர்க்க நாம் அடுத்த காலடி எடுத்து வைத்ததும், நம் கண்களுக்கு கொடி மரம் தென்படும். ஆலய கொடி மரத்துக்கும் மிகப்பெரிய தத்துவங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் ஆலயங்களில் கொடி மரம் வைத்திருந்த பழக்கம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே வழக்கத்தில் இருந்ததற்கு பல உதாரணங்கள் உள்ளன.

கோவிலில் திருவிழா தொடங்கும் சமயத்தில் கொடி ஏற்றம் நடந்ததை சங்க இலக்கியமான பட்டினப்பாலையில், மலர்மணி வாயில் பலர் தொழ கொடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
காடுகளில் சில மரங்களில் கொடி சுற்றி படர்ந்து இருப்பதை பார்த்து இருப்பீர்கள்.

அதில் இருந்து தான் கொடி ஏற்றும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியதாக கருதப்படுகிறது.
அது பல்வேறு நடைமுறைகளாக மாறி, இன்று துவஜஸ்தம்பம் என்று அழைக்கும் நிலை வரை வந்துள்ளது.

நம் உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கொடி மரம் என்று ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டு வடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

நம் முதுகுத் தண்டில் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணி பூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞை எனப்படும் ஆறு ஆதாரங்களும், . . .
இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்று நாடிகளும் அமைந்துள்ளன.
பொதுவாக இடை, பிங்கலை வழியாக செல்லும் பிராண வாயுவை, சுழிமுனை எனும் நடு நாடியில் நிறுத்தி இறைவனை தியானிக்க வேண்டும் என்பார்கள்.
இதனால் மனம் ஒரு நிலைப்படும்.
இறைவன் வெளிப்படுவான்.
இந்த அடிப்படையில் தான் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காது.
அதே சமயத்தில் கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும்.

அது போல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைக்க வேண்டும் என்பதற்கு விதிகள் உள்ளன.

இது கோவிலுக்கு கோவில் மாறுபடும். ஆனால் பெரும்பாலும் கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படி அமைப்பார்கள். இதன் அடிப்பகுதி அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும். இதற்கு சமபீடம் என்று பெயர். இந்த சதுர பாகம், படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப்பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவ பெருமானையும் குறிக்கும். அதாவது கொடி மரம் என்பது மும்மூர்த்திகளையும், அவர்கள் மேற்கொள்ளும் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற ஒரு அடையாளமாக திகழ்கிறது.

இதன் மூலம் கோவிலில் நுழைந்த உடனேயே வாழ்வின் மூன்று முக்கிய அம்சங்கள் நமக்கு உணர்த்தப்பட்டு விடுகின்றன. கொடி மரம் முழுவதும் பல்வேறு இறை உருவங்களை சிற்பங்களாக வடித்திருப்பார்கள்.

கொடி மர உச்சியில் மூன்று பட்டைகள் போன்ற ஏர் பலகை இருக்கும். இதனை திருஷ்டிப் பலகை என்றும் சொல்வார்கள் இதில் சிறு, சிறு மணிகட்டி தொங்க விட்டிருப்பார்கள். அந்த கொடி கோவில் உள்நோக்கியபடி இருக்கும். சிலகோவில்களில் மூன்று பட்டைக்கு பதில் ஒரே ஒரு பட்டையே இடம் பெற்றிருக்கும். மணி தொங்க விட்டிருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு காணப்படும்.
ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள். சில ஊர்களில் கல்லில் கூட கொடி மரம் உள்ளது.
இத்தகைய அமைப்புடைய கொடி மரத்தில் திருவிழா நாட்களில் கொடி ஏற்றுவார்கள்.

ஏன் கொடி ஏற்றுகிறார்கள் தெரியுமா? அதிலும் பல்வேறு தத்துவங்கள் அடங்கி உள்ளது.
பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும்.
பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை குறிக்கும் வகையில் தனது கொடியை பறக்க விடுவான்.
அதே போன்று தான், . . .

திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.

இது மக்கள் மன நிலையில் மாற்றம் ஏற்படுத்தவும், விழா சமயத்தில் வெளியாட்களால் நோய் பரவல் ஏற்படுவதையும் தடுக்கிறது. இதை கருத்தில் கொண்டே கொடி ஏற்றுவதற்கு முன்பு கல்பம், அனுகல்பம் என்ற இருவகை சடங்குகளை செய்வார்கள்.
கொடி ஏற்றுவதற்கு முன்பு தேவதைகளை ஆவாகனம் செய்வது கல்பம் எனப்படும்.
கொடி ஏற்றிய பிறகு தேவதைகளை ஆவாகனம் செய்வது அனுகல்பம் எனப்படும்.

இந்த சடங்குகள் மூலம் கோவில் கொடி மரங்கள் சக்தி மிக்கவைகளாக மாறுகின்றன.
இத்தகைய மரத்தில் கொடி ஏற்றுவது இறைவனின் படைப்புத் தொழிலை குறிப்பதாக சொல்கிறார்கள்.

எப்படி தெரியுமா?
கொடி மரம் என்பது இறைவன்,
கொடிக் கயிறு -சக்தி,
கொடித் துணி -ஆத்மா,
கொடி ஏற்ற பயன்படுத்தும் தர்ப்பைக் கயிறு -பாசம் ஆகியவற்றை குறிக்கும்.

கோவிலில் கொடி ஏற்றும் போது குருக்கள் வேதமந்திரங்கள் முழங்க,
தர்ப்பைக் கயிற்றுடன் வெள்ளைத் துணியை வளைத்து, வளைத்து ஏற்றுவார்கள். இது உயிர்களையும், அறத்தையும் உயர்ந்த நிலைக்கு உயர்த்துவதை உணர்த்துகிறது.
இறைவனிடம் பாசக்கட்டு அறுமாறு நம்மனதை பலியிட வேண்டும் என்பதற்காக, ஆன்மாவை பாசக்கயிறு சுற்றியுள்ளதை காட்டும் வகையில் கொடி மரத்தில் கயிறு சுற்றப்பட்டிருக்கும்.

லௌகீக வாழ்க்கையில் சிக்கித் தவிக்கும் நாம், எல்லோருமே பாசத்துக்கு கட்டுப்பட்டவர்கள்.
தர்ப்பைக் கயிறு எனும் பாசத்தால்,
கொடி துணி எனும் உயிர் கட்டப்பட்டுள்ளது. அந்த உயிர் இறைவன் திருவடியை அடைதல் என்ற தத்தவத்தை கொடி ஏற்றம் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. நமது உயிர் இறைவன் திருவடியை தஞ்சமடைய வேண்டுமானால் நம் மனமும் ஒரு முகமாக நிலை நிறுத்தப்பட வேண்டும்.
இதை உணர்த்த கொடி மரம் நேராக நிமிர்ந்து நிற்பதாக சொல்கிறார்கள். இன்னொரு வகையில் சொல்வதென்றால் அசுர சக்திகளை அகற்ற, சிவகணங்களை கோவிலுக்குள் அழைக்க, ஆலயத்தையும் பக்தர்களையும் பாதுகாக்கவே கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது.
அதனால் தான் கொடி மர உச்சியில்,
அந்தந்த ஆலய இறைவனின் வாகனம் ஒரு அடையாள சின்னமாக அமைக்கப்படுகிறது.
சிவன் கோவிலில் நந்தி,
பெருமாள் கோவிலில் கருடன்,
அம்மன் கோவிலில் சிங்கம், விநாயகர் கோவிலில் எலி, முருகன் கோவிலில் மயில், சாஸ்தா கோவிலில் குதிரை உருவம் அமைக்கப்படும்.

இந்த உருவங்களைத்தான் அந்தந்த ஆலயங்களில் கொடிகளில் வரைந்து ஏற்றுவார்கள். கீழ் நிலையில் உள்ள ஆன்மாவை இறைவன் உயர்நிலைக்கு உயர்த்துகிறான் என்பதை இது காட்டுகிறது.

இப்படி பல்வேறு வகைகளில் சிறப்புடைய கொடி மரத்துக்கு மூல லிங்கத்துக்கு செய்யும் அபிஷேகம், அராதனை, நைவேத்தியம் முதலிய அனைத்தும் செய்ய வேண்டும் என்பது விதியாகும்.

அந்த அளவுக்கு கொடி மரம் மூலவருக்கு நிகரானது. இன்னும் சொல்லப்போனால், கொடி மரம் அருகில் நின்று நாம் செய்யும் எல்லா பிரார்த்தனைகளும் மூலவரிடம் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொடி மரத்தை தொட்டு வணங்கினால் மட்டும் போதாது.
சுற்றி வந்தும் வணங்குதல் வேண்டும். மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, ஓரறிவை ஆறறிவு வணங்குகிறது என்று பாடியுள்ளார்.
ஓரறிவுள்ள மரத்தை ஆறறிவுள்ள மனிதன் வழிபடுகிறான் என்பது இதன் பொருள்.

இந்த வணக்க முறைக்கும் விதிமுறை உள்ளது. நாம் கால் நீட்டி விழுந்து வழிபடும்போது, பின்புறம் எந்த தெய்வ சன்னதியும் இருக்கக்கூடாது. ஆலயத்தின் உள்ளே பல சன்னதிகள் இருக்கும் என்பதால்தான் விழுந்து வணங்கக் கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் எந்த சன்னதியும் இருக்காது என்பதால் தான் கொடி மரம் அருகே விழுந்து வணங்க வேண்டும் என்கிறார்கள்.
ஆண்கள் எப்போதும்
2 கால்கள், 2 கைகள், 2 காதுகள், நெற்றி, மார்பு ஆகிய 8 உறுப்புகளும், தரையில் படும் வகையில் அஷ்டாங்க நமஸ்காரம் செய்தல் வேண்டும்.

பெண்கள் தலை, 2 முழங்கால், 2 உள்ளங்கைகள் ஆகிய 5 உறுப்புகள் தரையில் பட பஞ்சாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். கொடி மரத்தை வழிபடும்போது நேராக நின்று வணங்கக் கூடாது.
கெட்ட கதிர்கள் நம் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் அப்படி சொல்லி வைத்துள்ளனர். பொதுவாக கோவிலில் யாக வேள்விகள் நடத்தும்போது அவற்றை கொடி மரம் அருகில்தான் நடத்துவார்கள்.
இதனால் அந்த இடம் மந்திர சக்தி மிகுந்த இடமாக மாறும். அடிக்கடியாக வேள்விகள் நடத்தும்பட்சத்தில் ஆல்பா, பீட்டா,
காமா கதிர்கள் நிரம்பி விடும்.
ஆல்பா, பீட்டா இரு கதிர்களும் பாதிப்பை ஏற்படுத்தாது.
ஆனால் . . . காமா கதிர்கள் பெரும் கெடுதல் ஏற்படுத்தி விடும்.
எனவேதான் கொடி மரம் எதிரில் நின்று கும்பிடாமல் சற்று ஓரமாக நின்று வழிபட வேண்டும்...

Thursday, 22 September 2016

திருப்பதியில் தரிசிக்க வேண்டிய புண்ணிய இடங்கள்!

புண்ணிய மாதமாம் புரட்டாசி
.புரட்டாசி என்றால் திருப்பதி தரிசனம் வெகுவிசேஷம் அல்லவா? இந்த மாதத்தில் ஏதேனும் ஒருநாளாவது திருப்பதிக்குச் சென்று திருவேங்கடவனைத் தரிசித்துவிடவேண்டும் என்பதை, ஒரு சங்கல்பமாகவே ஏற்றிருப்பார்கள் பாலாஜியின் பக்தர்கள்.

அப்படி, ஏழுமலையானைத் தரிசிக்கச் செல்லும் பக்தர்கள், திருப்பதியில் அவசியம் தரிசிக்க வேண்டிய வேறு சில இடங்களும் உண்டு. அவை என்னென்ன தெரிந்துகொள்வோமா?

*பாதாள மண்டபம்:* 

இது மலை அடிவாரத்தில் உள்ளது.ஸ்ரீ நிவா ஸனின் விஸாலமான இரண்டு பாதங்கள் சிற்பத்துடன் பெரிய தாகக் காணப்படுகின்றன. திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் இங்கு அர்ச்சனை ஆரத்தி செய்வதற்கு வசதியாக தேவஸ்தான அர்ச்சகர் கள் இருக்கிறார்கள். இந்த இடத்தை அலிபிரி என்று அடிபுளி என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள புளிய மரத்தின் கீழேதான், உடையவர் ராமானுஜருக்கு, திருமலை நம்பிகள் ஸ்ரீ மத் ராமாயண ரகசியங்களை உபதேசித்தார் என்றும், அப்போது அவர் ஸேவிக்க வசதியாக திருமலை ஸ்ரீ நிவாஸனின் பாதங்கள் தோன்றிய தாகவும் வேங்கடாசல இதிஹாஸ மாலா என்ற நூல் கூறுகிறது.

*தலயேரு குண்டு:* 

பாதாள மண்டபம் தாண்டியவுடன் சிறிது தூரத்தில் தலயேரு குண்டு என்கிற பெரியபாறையைக் காணலாம். இந்தப் பாறையின் மீது பக்த ஆஞ்சநேயர் சிற்பம் செதுக்கப்பட் டுள்ளது. மலை ஏறுவோரும் இறங்குபவர்களும் தலைவலி அல்லது கால்வலி வராமல் இருக்க, தங்களின் தலையை இப்பாறையின் மீது தேய்ப்பார்கள். அந்த அடையாளம் சிலையில் தென்படுகிறது.

*கும்மர மண்டபம்:*

 தலயேரு குண்டு தாண்டியதும் காணப்படும் மிகவும் சிதிலமான மண்டபம் கும்மர மண்டபமாகும். கும்மர மண்டபம் என்றால், குயவன் மண்டபம் என்று பொருள். தொண்டமான் சக்ரவர்த்தி அரசாண்ட காலத்தில், குரவ நம்பி என்கிற குயவன் திருமலை ஸ்ரீநிவாஸன் திருமடைப்பள்ளிக்குத் தளிகை செய்யத் தேவையான மட்பாண்டங்க ளைத் தயார் செய்து அனுப்புவான். அவன் அனுதினமும் தான் இருக்கும் இடத்திலேயே ஸ்ரீ நிவாஸனின் மண் விக்கிரகத்துக்கு பூஜைகள் செய்து, மண் புஷ்பங்களை பக்தியுடன் சமர்ப்பித்து வந்தான். அவ்வாறு அவன் சமர்ப்பித்த மண் புஷ்பங்கள், திருமலையில் பெருமாள் சந்நிதியில் தென்பட்டதாம்! அவன் வசித்த இந்த இடம் அவன் பெயராலேயே அழைக்கப் படுகிறது.

*முக்கு பாவி:*

 திருமலைக்கு நடந்து செல்லும் வழியில் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் கோயிலுக்கு முன்பாக முக்கு பாவி என்கிற ஆழமான கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் கரையில் பக்த ஆஞ்சநேய ஸ்வாமி மண்டபம் உள்ளது. மஹந்து மடத்தைச் சேர்ந்த ஸாதுக்கள் பூஜை செய்கின்றனர். ‘முக்கு’ என்றால் கோலம் போடுதல் என்று பொருள். கோலம் போடும் கற்கள் அதிகமாக இங்கு தென்படுவதால் அந்தப் பெயர் ஏற்பட்டது. ஸ்வேத சக்ரவர்த்தி என்கிற அரசனின் குமாரர் ஸம்பு  என்பவர் இங்கு தவமியற்றினாராம். ஸ்ரீ நிவாஸன் நேரில் தோன்றி அவரை அனுக்கிரஹித்தாராம்.

*த்ரோவ்வ நரஸிம்முடு:*

 திருமலைக்கு நடந்து செல்லும் வழியில் ஒன்பதாவது மைலில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் ஆலயம் ஒன்றுள்ளது. திருமலைக்கு நடந்து வந்த மார்க்கண்டேய மஹரிஷி வேண்டிக் கொண்டதன் பேரில் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் இங்கு அவருக்கு தரிசனம் அளித்தாராம். சாலுவ நரஸிம்மராயுலு என்கிற அரசன் இந்த ஆலயத்தைப் புதுப்பித்திருக்கிறான்.

*கண்டா மண்டபம்:*

 திருமலையில் அவ்வசரிகோண என்கிற இடத் துக்கு அருகில் பெரிய மலையின் மீது இதை நிர்மாணித்துள்ளனர். மலையில் பெருமாளுக்கு நைவேத்தியம் ஆகும் நேரம், திருமலைக் கோயிலில் இரண்டு மணிகளை அடிப்பார்கள். திருமலை பூராவும் எதிரொலிக்கும் அந்த நாதத்தைக் கேட்டு கண்டாமண்டபத்திலுள்ள மணியை அடிப்பார்கள். அந்த கண்டாநாதம் கீழ்த் திருப்பதி  சந்த்ரகிரி போன்ற இடங்களிலும் கேட்குமாம். விஜயநகர ராஜாக்கள் சந்த்ரகிரியில் முகாமிடும் நேரத்தில் இந்த கண்டா  நாதத்தை (மணியொலியை)க் கேட்ட பிறகே சாப்பிடுவார்களாம்.

*மோகாள்ள முடுபு:*

 திருமலைக்கு நடந்து வரும் பக்தர்கள், தங்களின் முழங்காலைப் பிடித்துக் கொள் கிற மாதிரியான வலியை உண்டாக்கும் இடம் இது. அந்த நாளில் பக்தர்கள் இந்த இடம் வரும்போது, முழங்காலில் கையை வைத்தபடி மலை ஏறுவார்களாம். எம்பெருமானாருக் கும் வியாஸராயருக்கும் திருமலை பூராவும் சாளக்கிராமமாக ஸ்வாமி தென்பட்டதால், இருவரும் முழங்காலால் மலை ஏறினார்களாம். ஸங்கீத மூர்த்தி அந்நமாசார்யருக்கு இந்த இடத்தில் தாயார் (அலமேலுமங்கை தாயார்) பிரசாதம் கொடுத்து வழி காட்டியதாகக் கூறுவர்.

*அவ்வசரிகோண:*

 மோகாள்ள முடுபு என்கிற இடத்துக்கு அருகில் உள்ள பள்ளமான இடம் இது. ‘அந்தப் பக்கத்தில் உள்ள பள்ளம்’ என்று பொருள்.

*த்ரோவ்வ பாஷ்யகாருலு:*

 திருமலைக்குச் செல்லும் வழியில் மோகாள்ள முடுபுவுக்கு அருகில் பாஷ்யகாரர் ஸந்நிதி உள்ளது. ‘த்ரோவ்வ’ என்றால் நடந்து போகும் வழி எனப் பொருள். நடந்து போகும் வழியில் உள்ள பாஷ்யகாரர் ஸந்நிதி இது. உடையவர் திருமலைக்கு வந்தபோது இங்கு சிறிது நேரம் இளைப்பாறினார் என்றும், திருமலை நம்பி அவருக்கு ஸ்வாகதம் (நல்வரவு) கூறி வரவேற்றதாகவும் ஐதீகம்.

*ஸார்ல பெட்டெலு:* 

மோகாள்ள மலை தாண்டியவுடன் பெட்டி பெட்டியாக சிலைகள் காணப்படுகின்றன. இவற்றைக் காவல் காப்பது போல் அனுமன் சிலை ஒரு பெட்டியில் உள்ளது. ஸ்ரீ நிவாஸ கல்யாணம் ஆனவுடன் சீர் வரிசைகளுடன் வந்த பத்மாவதித் தாயாரைப் பார்த்து ஸ்ரீ நிவாஸன் இந்தப் பெட்டிகளில் கறிவேப்பிலை இருக்கிறதா எனக் கேட்டதாகவும், கோபம் அடைந்த தாயார் திருச்சானூர் சென்றுவிட்டதாகவும் செவிவழிக் கதை ஒன்றுண்டு!

இனி, திருமலையை அடைந்ததும் அங்கே தரிசிக்க வேண்டிய சில இடங்களைப் பார்ப்போம்.

*ஹைஜ ஸிலா தோரணம்:* 

திருமலையில் பெருமாள் சந்நிதிக்கு வடக்கில் சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் இது உள்ளது. இதற்கு முன்பு இந்த ஸிலா தோரணம் ஸ்படிக சிலையாக இருந்ததாம். கடல் பொங்கி அலைகளால் தள்ளப்பட்ட சிலைகள் எனக் கூறுகிறார்கள். உலகிலேயே அபூர்வமான ஸிலா தோரணம் இது.

*நாராயணகிரி பாதாலு:* 

பெருமாள் சந்நிதிக்குச் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் நாராயணகிரி சிகரத்தின் மேல் பெருமாள் பாதங்கள் உள்ள சிலை ப்ரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நேராக பூலோகத்தில் கீழே இறங்கிய பகவான் இங்கு பாதத்தை வைத்து இறங்கினாராம். வருடம்தோறும் ஆடி மாதம் சுக்ல துவாதசி அன்று இங்குள்ள மண்டபத்தில் உள்ள தூண்களுக்கு 2 குடைகளைக் கட்டிப் பெருமாள் பாதங்களுக்குப் பூஜை நடக்கிறது.

இந்த இடங்கள் மட்டுமின்றி, ஆயிரங்கால் மண்டபமும் கொலு மண்டபமும், திருமலை நம்பி ஸந்நிதியும், அநந்தாழ்வான் தோட்ட மும், வஸந்த மண்டபமும் திருமலையில் உள்ளன. மேலும் ஸ்ரீ மத் அழகியசிங்கர் நிர்மாணித்துள்ள ஸ்ரீ அஹோபில மடம், ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரம், பரகால மடம், பெரிய ஜீயர் மடம், சின்ன ஜீயர் மடம் ஆகியனவும் திருமலையில் அழகுற மிளிர்கின்றன.

Tuesday, 6 September 2016

எந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசனும்..?

மேசம் ராசிக்காரங்க கிட்ட எச்சரிக்கையா பேசனும்..பாராட்டி பேசலாம் ஆனா வாக்குவாதம் செய்யக்கூடாது.

 

ரிசபம் ராசிக்காரங்க கிட்ட கனிவா பக்குவமா பேசனும்....

 

மிதுனம் ராசிக்காரங்க கிட்ட அதிகமா வெச்சிக்காதீங்க..லைட்டா பேசுவாங்க ஹெவியா உங்களை ஆராய்ச்சி பண்ணுவாங்க...

 

கடகம் ராசிக்காரங்ககிட்ட பாசமா பேசலாம் எல்லா உதவியும் கிடைக்கும்..
 

சிம்ம ராசிக்காரங்கக்கிட்ட பொறுமையா பேசனும்..படபடன்னு பேசிட்டு போய்ட்டே இருப்பாங்க..நேர்மையா பேசலைன்னா கட்டம் கட்டிடுவாங்க...

கன்னி ராசிக்காரங்க நட்பை முறிச்சிக்க கூடாது அவர்களால் நிறைய ஆதாயம் உண்டு அதுவே உத்திரம் கன்னின்னா கொஞ்சம் எச்சரிக்கையா பார்த்து பேசுங்க...

 

துலாம் ராசின்னா ஜாலியா பேசலாம்..சுவாதி கம்பீரமா நடந்துக்குவாங்க..கொஞ்சம் கவனமா இருங்க.உங்களை எடை போட்டு நீங்க இவ்வளவுதான்னு மார்க் போட்ருவாங்க

 

விருச்சிகம்..அன்பா அனுசுரனையா பேசலாம்..கொஞ்சம் சால்ட்டா கிண்டலடிச்சா நீங்க வாழ்க்கையில வாங்காத நோஸ்கட் வாங்கிக்குவீங்க..அன்புல தென்றல்..கோபத்துல சுனாமி..

 
தனுசு ராசிக்காரங்க கிட்ட அன்பா பேசி காரியம் சாதிக்கலாம்,..நாலு வார்த்தை பாராட்டுங்க...அன்புக்கு நான் அடிமை என்பது தனுசுவின் குணம்...அர்ஜுனன் ..கிருஷ்ணர் மீது வைத்திருந்தது சாதாரண அன்பு இல்லை..அந்த அன்புக்குத்தான் பகவானே மயங்கி கிடந்தார்..தேரோட்டியாக வந்தார்...வில்லுக்கு அர்ஜுனன் தனுசு ராசி.
மகரம் ராசிக்காரங்க நிறைய புலம்புவாங்க..அப்படியே நம்ப வேண்டாம். அவங்க இயல்பு அது.கடுமையான உழைப்பாளிகள் பேச்சுதான் முன்ன பின்ன இருக்கும்.

கும்பம் ..அடுத்த அம்பானி இவர்தான்னு நம்புற மாதிரி பேசுவாங்க..உம் கொட்டிட்டு நீங்களும் உங்க சாதனைகளை சொல்லுங்க...

மீனம்..அசந்தா ஆத்துல இல்ல காத்துல கூட மீன் பிடிப்பாங்க..மத்தவங்க ரகசியங்கள் எல்லாம் இவர்கிட்ட தெரிஞ்சிக்கலாம்..

பெண்கள் ஏன் மாதவிடாய் காலங்களில் ஆலயங்கலுக்கு செல்வது அனுமதிக்க படுவது இல்லை...

🌼எந்த ஒரு காரியத்திட்கும் காரணம் ஒன்று நிச்சயமாக இருக்கும்.. பிரபஞ்சத்தில் எந்த ஒரு காரியம் நடைபெறினும் அதற்கான காரணம் நிச்சயம் உண்டு..சில காரணங்கள் பாமர மக்களால் விளங்கிக்கொள்ளகூடியதாக இருக்கும்....சிலவற்றை பண்டிதர்களாலும்,படித்து தெளிவடைந்த சிலரால்மட்டுமே புரிந்து கொள்ள முடியும். எம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதற்காக காரணங்கள் இல்லை என்று எண்ணுவதோ அல்லது காரணம் புரியாமல் செய்வதோ தவறானதொரு செயலாகும்...
அந்த தவறை நம்மில் 99 சதவீதமானோர் புரிந்த வண்ணம் உள்ளனர்.

🌼எம்மால் எல்லா காரியங்களுகும் காரணங்களை புரிந்து கொள்ள இயலாது எனினும் எம்மால் புரிந்து கொள்ள கூடிய வகையில் உள்ள எளிய விடயங்களை தெரிந்து நடந்து கொள்ளலாம் அல்லவா???

🌼எல்லா மதங்களும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் விஞ்ஞானத்தை அடிப்படியாக கொண்டே பயணிக்கிறது...எனினும் அதை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை...இந்துமதத்தின் எல்லா சம்பிரதாயங்களும் ..எதோ ஒரு வகையில் அறிவியலுடன் சேர்ந்தே பயணிக்கும்....
ஆலயங்கலின் கோபுரங்களின் அறிவியல் தத்துவம் இதற்கு முந்தய பதிவில் இடம்பெற்றது....பதிவுகளை மீள பாருங்கள்....

🌼அவ்வாறான இந்து மதத்தின் சில அறிவியல் சார் விடயங்களை பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

🌼1.பெண்களை ஆலயங்களின் கருவறையிலோ அல்லது சாதாரனமாகவோ மந்திரங்கள் அதாவது சமஸ்கிருத மந்திர உச்சாடணம் செய்யவோ, குருக்கள் அல்லது பிராமண அந்தஸ்து கொடுக்கவோ இந்து மதம் அனுமதிப்பதில்லை...

🌼உண்மையில் மந்திரங்கள் என்பது வெறுமனே கடவுள் நம்பிக்கை சார்ந்த்து மட்டும் அல்ல..அது இயற்ப்பியளுடன் உரசிச்செல்கிறது..
மந்திர ஒலி என்பது அலைகளின் அதிர்வெண்(Frequency) சார்பாக உருவாக்க பட் டது. ஒவ்வொரு மந்திரங்களும் ஒவ்வொரு அதிர்வெண்ணில் அமையப்பெற்றது.மந்திர ஒலி என்பது ஒவ்வொரு சுருதியில் அதாவது மீடிறனில் அமைந்து இருக்கும்...அம்மந்திரங்கள் காதால் கேட்கும் போது கடத்தப்படும் அதிர்வுகளை விட வாயினால் ஜெபிக்கும் போது உடலை ஊடுவிச்செல்லும் அதிர்வு தாக்கம் அதிகம் என்பது எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடிய சாதாரண விடயம்....

🌼இந்த அடிப்படை காரணத்தை முதலாக கொண்டே பெண்கள் மந்திரங்கள் ஜெபிக்கவோ அல்லது பிராமணர்களாகவோ அனுமதிக்க படுவதில்லை...ஏனெனில் ஆண்களை விட பெண்களின் நிலை உடல் மற்றும் மன ரீதியாக வலிமை குறைந்தது...ஆகவே பெண்கள் இம்மந்திரங்களை ஜெபிக்கும் போது அதிக அளவில் தாக்க படுவர்..அதாவது பெண்களின் மார்பகங்கள்,மற்றும் கருப்பைகள்,போன்ற பகுதிகள் இந்த அதிர்வுகளை தாங்க இயலாது போகலாம்..அதனால் மலட்டு தன்மை மற்றும் பெண்மை சார்ந்த பல தாக்கங்கள் உருவாகலாம்..

🌼அதை விட பெண்கலின் மாதவிடாய் காரணங்களினால் மாதத்தின் எல்லா நாட்களிலும் அவர்களால் பணியை தொடர இயலாமல் போகலாம்....இத்தகைய காரணங்களினாலேயே பெண்கள் அனுமதிக்க படுபவது இல்லை...

🌼அமெரிக்க விஞ்ஞானியான ஸ்ட்ராங்ளர் மந்திர ராஜம் எனப்படும் காயத்ரி மந்திரத்தை ஆராய்ந்தார்.
வினாடிக்கு இரண்டு லட்சம் அதிர்வுகளை ஏற்படுத்தும் இந்த மந்திரம் அபூர்வமானது. அது
ஒலிக்கப்படும் இடத்திலிருந்து சுமார் 1600 மைல் தூரம் வரை சுற்றுப்புறத்தைத்
தூய்மைப்படுத்துகிறது!

🌼க்ளாட்னியின் அடிப்படையில் பின்னால் வந்த ஆராய்ச்சியாளர்களுள் மிகவும் முக்கியமானவர் ஹான்ஸ் ஜென்னி.
மந்திரங்களின் மகிமையைப் பற்றிய இவரது கண்டுபிடிப்புகள் உலகினரை பிரமிப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றன. ஹிந்துக்கள் அனைவரும் பெருமை கொள்ளும் விதத்தில் மந்திரங்களைப் பற்றிய அரிய உண்மைகளை இவர் உலகினருக்கு அறிவித்தார்.