Tuesday, 24 November 2015

திருப்பதி - ஸ்ரீநிவாசனா ? முருகனா?

குன்று இருக்குமிடமெல்லாம்  குமரனிருக்கும் இடம்."தமிழகத்தின்   வட எல்லையாக. இருந்த திருவெங்கடமும் குமரனின்  குன்றே. அது முருகன்  ஆலயமே" என்று படிக்க. நேர்ந்தது.

வாதங்களை பார்ப்போம்.

1. குன்று இருக்கும் இடமெல்லாம்  குறிஞ்சிக்கடவுள் முருகனே இருக்கிறான். தமிழகபரப்பில்  இருந்த திருப்பதி கோவில்  தமிழ்மன்னன் ஒருவனால்  கட்டப்பட்ட முருகன்கோவிலே.  கோவில் கட்டியது குறித்த வரலாறு தெளிவாக இல்லை.

2. திரு + வேல் + இடம் = திருவேங்கடம்.

3. வேல் + உடைய + ஈஸ்வரன் = வெங்கடேஸ்வரன்.
வைணவ இறைவனின் பெயரில்  ஈஸ்வரன் என்ற. சைவப்  பெயர்  எப்படி வந்து  ஒட்டியிருக்க முடியும்.

4. கோவிலின் அமைப்பு ஆகம. முறைப்படிசைவ கோவிலாகவே  அமைந்திருக்கிறது.கோவில்  மதில்களில் வைணக்கோவில்களில்  இருப்பது போல் கருடாழ்வார் இல்லை.

5. மூலவர் என்றும் அலங்கரித்த நிலையிலேயே பார்வைக்குவைக்கப்படுகிறார். நெற்றியில் நாமம்   சார்த்தி கவசங்களாலும் ஆடை  அணிகளாலும் மறைக்கப்பட்டு"பாலாஜி" ஆக்கப்பட்ட இறைவன்  பதினாறுப்பிராயம் கொண்ட பாலானான முருகனே.

6. மூலவரின் இடது கை மேல் நோக்கியவாகில் வேல் பிடிப்பதற்கு  ஏதுவானதாக உள்ளது. (பார்க்க படம்). முருகனின் கை வேல்பறிக்கப்பட்டு கவசம் அணியப் பெற்று  மாலவனாக. மாற்றப்பட்டுள்ளது.

நான்கு கரமுடைய விஷ்ணு இரண்டுகரங்களோடு இருப்பதாக காட்டப்படுவதால்.சங்கும் சக்கரமும் பிடிப்பதற்கு இரண்டுகரங்கள் இல்லாததால் தோளில்நிறுத்தப்பட்டுள்ளது.

7. கவசங்களோ, நாமமோ இல்லாத சிலையைஅபிஷேகம் செய்வது திரையிட்டேசெய்யப்படுவதால் உண்மையான மூலவர்வடிவத்தை யாரும்  பாராதது அலங்கரிக்கப்பட்ட இறைவனையே நாம்பார்க்கிறோம். அதுவும் ஒரு நிமிடத்திற்குள்"ஜருகண்டி"  செய்யப்படுகிறோம்.

8. கோவில் மதில்களில் உள்ள தமிழ்எழுத்துக்கள். இவை வட்டெழுத்துக்களாக உள்ளன. பெரும்பாலான  இடங்களில்சுண்ணம் பூசப்பட்டு  மறைந்தே உள்ளன. இவற்றை ஆராய்ந்து அறிய. நேர்ந்தால் கோவிலின்  வரலாறு  கிடைக்கலாம்.

9. பாலாஜி என்ற பெயரில்  அலர்மேலு, பத்மாவதி  என்ற இரண்டு மனைவிகளோடுஇருப்பதாக உள்ள இறைவன் உண்மையில்வள்ளி, தெய்வானையோடு  உள்ள முருகனே. (பார்க்க படம்)

10. துவாபரயுகத்தோடு ஒன்பதாவதுஅவதாரமான "கண்ணன்" அவதாரம் முடிந்துவிட்ட நிலையில், கலியுகத்தில் கல்கி அவதாரம்  மட்டுமே பாக்கியுள்ள. நிலையில் இறைவன் "சீனுவாசனாக" பூமியில் இறங்கிவந்தது என்ன அவதாரம்.
இந்த அவதாரம் ஏன் கணக்கில் வரவில்லை.

11. தல வரலாற்றுப் புத்தகம் இராமாயணத்தையே மாறுபட்ட வடிவில்சொல்கிறது. சீதைக்கு பதிலாக பூமாதேவி(சத்யவதி என்ற பெயரில்) தானே இராவணனிடத்தில்  இருந்ததாகவும் அவளே தீயில்  இறங்கியதாகவும் சீதை பத்திரமாகஇருந்ததாகவும்.
தீயில் இறங்கிய பின் இரண்டு  சீதைகள் இருக்க..  பூமாதேவியாகிய சீதையை  இராமன்தான் ஏக பத்தினி விரதன்  என்பதால் மணக்கமுடியாது என்று சொல்லி விட. அவளேபத்மாவதியாய்ஆகாச ராஜனுக்கு தோன்ற"சீனுவாசனாக" வந்து அவரை இறைவன் மணந்தார். லட்சுமியே தன் கணவனுக்குபத்மாவதியை மணம் செய்வித்தார் என்பதாகபோகிறது கதை. தல வரலாறு இதிகாசபுராணங்களில்  இருந்து பெருமளவில்திரிந்திருக்கிறது.  இது  கடவுளை  மாற்றியபிறகு  இட்டுக் கட்டப் பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தை கிளப்புவது.

(படிக்க தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி எனஅனைத்து மொழியிலும் கிடைக்கும் திருப்பதிதல வரலாறு).

12. திருமுருக கிருபானந்த  வாரியாரும் தமதுகந்த புராண  சொற்பொழிவுகளில் திருப்பதி குமரன் கோயிலாக இருக்கக்  கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

முருகன்தான் "சீனுவாசனாக" அவதாரம் எடுக்க. வைக்கப்பட்டான்  என்று தோன்றுகிறது. திருப்பதி ரகசியத்தை அந்தகால ஆழ்வார்கள் முதல் அன்னமாச்சார்யாக்கள் வரை கட்டி காப்பாற்றிவருகிறார்கள்.

No comments:

Post a Comment