Monday, 9 September 2019

முருகப்பெருமானின் திருநாமங்களும் பலன்களும்

ஆறுமுகன் - கேட்டதைக் கொடுப்பார்
குகன் - ஞானத்தை நல்குவார்
குருபரன் - குருவருளை சேர்ப்பார்
குணதரன் - நற்சிந்தனையை வளர்ப்பார்
குழகன் - நல் உச்சரிப்பை நல்குவார்
குக்குடி கொடியோன் - அதிகாரம் அளிப்பார்
குறிஞ்சிக்கிழவன் - ஈகையை அளிப்பார்
கந்தன் - கருணையை நல்குவார்
கடம்பன் - நல்வாழ்க்கைத் துணையை அளிப்பார்
கார்த்திகேயன் - பாசத்தைக் கொடுப்பார்
கதிர்வேலன் - காரிய சித்தி அளிப்பார்
காங்கேயன் - பிறப்பை ஒழிப்பார்கங்கை மைந்தன் - பாவம் ஒழிப்பார்
கலையறி புலவன் - கலைஞானம் கொடுப்பார்
கௌரி புத்ரன் - புண்ணியம் நல்குவார்
சரவணபவன் - தஞ்சம் அளிப்பார்
சண்முகன் - சித்திகள் அளிப்பார்
சக்திதாசன் - சிவஞானம் கொடுப்பார்
சக்தி வேலவன் - பெற்றோரைப் பேணிடச் செய்வார்.


Thursday, 18 April 2019

சமாதிகள் விளக்கம்

சஜீவ சமாதி, ஜீவ சமாதி, இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. வள்ளலார் ஒளிதேகம் பெற்று அரூபமாக மறைந்தார். ஷீர்டி பாபா உயிர் நீத்தபின் ஜீவ சமாதியில் கிடத்தப் பட்டார். ராகவேந்திரர் இன்னும் உயிரோடு சஜீவ சமாதியில் அமர்ந்துள்ளார். இதுபோக இன்னும் சமாதி நிலைகள் உண்டு. சித்தர்கள் கற்பம் உண்டு நிர்விகல்ப சமாதியில் அமர்ந்தபின் பலகாலம் கழித்து இயல்பாக எழுந்து வருவார்கள். இந்த அடிப்படைப் புரிதல் இருந்தால் தர்க்கம் எழாது.